Vellala Gounder

Vellala Gounders (வெள்ளாள கவுண்டர்-வேளாள கவுண்டர்)
Theeran ChinamalaiThe people living in this region are called by their caste with prefix ‘Kongu’ eg. Kongu Vellalar. 
இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களின் சாதி பெயருக்கு முன் ‘கொங்கு’ என்ற அடைமொழியுடன் அழைக்கபடுகின்றார்கள்.
Kongu vellala gounder’s marriage customs are unique amongst other communities in Tamil Nadu and usually do not accept the officiating of Brahmin priests. 
கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் திருமண சடங்குகள் தமிழகத்தின் மற்ற சமுதாயத்திடமிருந்தும், பிராமணரால் நடத்தப்படாததுமான திராவிட தனிதன்மையுடையதாகும்.
This indirectly says that, they are one of the oldest and civilized communities in India.
எனவே இவர்கள் இந்தியாவின் தொன்மையான நாகரீக சமுதாயங்களில் ஒன்றாவார்கள்.
 புராணம்:
வீராட்சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் அவர்கள் வேளாளபுராணம் என்னும் நூலை மிகவும் அழகிய கவிதைகளால் பெருங்காவியமாகப் பாடினார். அதில் வேளாளர் தோற்றம் பற்றி புராண ஜதீகங்களுடன் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அந்நூலை அழகிய உரைநடை வடிவில் கோவை விளாங்குறிச்சி நா. மருதாசலக் கவுண்டர் அவர்கள் ஆக்கியளித்துள்ளார்கள். அதில் கீழ்வருமாறு வேளாளர் தோற்றம் கூறப்படுகிறது.
கைலாசத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும்போது நான்முகன் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட வசதிகளை மக்௧ள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வில்லையே என்று முறையிட்டார். சிவபெருமான் நான் முகனிடம் திருமாலைச் சென்று பார்க்குமாறு பணித்தார்.
திருமாலிடம் நான்முகன் முறையிடும்போது போதாயன முனிவர் வந்தார். போதாயன முனிவரை அறிமுகப்படுத்தி அவரையே வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு திருமால் வேண்டினார்.
உண்ணத் தெரியாமல், உணவைப் படைக்கத் தெரியாமல் இருந்த உலகுக்குக் கங்கைத்தாயின் அருகேயுள்ள திருவேணி சங்கமத்திலிருந்து ஒரு மரபாளனை உற்பத்தி செய்து அவனுக்குச் சகல செய்திகளையும் கற்பிக்குமாறு போதாயனருக்குத் திருமால் ஆணையிட்டார்.
கங்கா தேவியின் சன்னிதானத்தில் மரபாளனைப் பெற்றுத் தன்னோடு இந்திரலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று போதாயன முனிவர் வேண்டினார்.
தான் பெற்ற மரபாளனை இரு கைகளாலும் பரிந்து எடுத்து உச்சிமோந்து ஆனந்த முத்தங்கள் தந்து பொன்னுலகு சென்று சிறப்பெல்லாம் பெற்றுப் போதாயனருடன் மண்ணுலகு செல்க மகனே என்று கங்காதேவி அனுப்பி வைத்தாள்.
இந்திரன் எல்லா இன்பங்களையும் குறைவறப் பெற்றிடுக என வாழ்த்தினான். இந்திரன் மரபாளனைச் சரியாசனத்தில் இருக்கச் செய்து பார் முழுதும் ஏர் முனையைத்தான் நம்பியுள்ளது.சகல பிணிகளிலும் தலையான பசிப்பிணியை தீர்க்க ௨ழவுவைத்தியத்தைத் தவிர வேறு உண்டோ? உழவுத் தொழில் இல்லாமல் உலகில் என்னதான் நடக்கும் இதற்கு இணையான தொழில் ஏதுமில்லை என்றான்.
இந்திரன், குபேரன் இவர்கள் பெண்மக்களை மணந்த மரபாளன் (வேளாளன்) பூமிக்கு வந்து பயிர்த்தொழில் செய்ய முற்பட்டான். கங்கையின் அருளால் தோன்றியமையால் வேளாளர் கங்கா குலத்தினர் என அழைக்கப்பட்டனர்.